உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செய்தியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்களை வழங்கி வருகிறது. அதன்படி வீடியோ கால் மூலமாக ஸ்கிரீன் ஷேர் செய்யும் வசதி, பயனர்களுக்கு பாதுகாப்பை வழங்கும் வகையில் இமெயில் மூலமாக லாகின் செய்யும் வசதி, ஒரே whatsapp செயலியில் ஒன்றுக்கும் மேற்பட்ட அக்கவுண்ட் லாகின் செய்யும் வசதி என பல அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியிடப்பட்டன. அது மட்டுமல்லாமல் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அனைத்தையும் உயர்தரத்துடன் பயனர்களுடன் பகிரும் வகையில் புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முதலில் பயணங்கள் whatsapp சாட்டில் இருக்கும் +என்று ஐகானை கிளிக் செய்து உங்களின் நண்பர்களுக்கு ஷேர் செய்ய வேண்டிய வீடியோ அல்லது புகைப்படத்தை தேர்ந்தெடுத்து hd என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு எச்டி வடிவிலான வீடியோக்களை பயனர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். இந்த அப்டேட் முதலில் வாட்ஸ் அப் டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.