இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஒரு ரூபாய் முதல் லட்ச ரூபாய் வரை யு பி ஐ மூலமாக பகிர்ந்து தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்கள். இன்டர்நெட் இல்லாத பகுதிகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக UPI Lite வாலட் கட்டணத்தின் அதிகபட்ச வரம்பை 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலமாக ஆஃப்லைனிலும் பணம் செலுத்தலாம். இப்படி ஒரு நாளைக்கு 2000 ரூபாய் வரை பணம் செலுத்தலாம் என ஆர்பிஐ அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பரில் UPI lite அறிமுகமானபோது ஒவ்வொரு மாதமும் ஒரு கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.