உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்களை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது புகைப்படங்கள், வீடியோக்கள், GIF, ஆவணங்களை பகிரும்போது தலைப்புகளை திருத்தக் கூடிய புதிய அம்சத்தை whatsapp நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்கள் அனைவருக்கும் கிடைக்கும் என whatsapp நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது எடிட்டிங் ஆப்ஷன் வீடியோ செய்திகள் மற்றும் குறுஞ்செய்திகளில் வேலை செய்யும். மீடியா செய்தியை கிளிக் செய்து எடிட் விருப்பத்தை தேர்ந்தெடுப்பதன் மூலமாக எடிட் ஆப்ஷன் வீடியோ மெசேஜ் மற்றும் டெக்ஸ்ட் மெசேஜ் இரண்டுக்கும் வேலை செய்யும். இதனை 15 நிமிடங்களில் திருத்த முடியும். இதற்கு முன்னதாக வாட்சப் மூலம் படங்களை பகிரும் போது கம்ப்ரஸ் எனப்படும் சுருக்கத்தால் அசல் படத்தின் தரம் இழக்கப்படும். ஆனால் இந்த புதிய அப்டேட் மூலம் தரத்தை இழக்காமல் படங்களை பகிர முடியும் m