வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒரு பகுதியாக செயலற்ற கணக்குகள் நீக்குவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. அதனால் உங்கள் கணக்கை நீக்கும்போது அதில் சேமிக்கப்பட்டுள்ள அனைத்து உள்ளடக்கத்தையும் நீங்கள் இலக்க நேரிடும் என கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதுகாப்பு அபாய நிலையில் இருந்து வாடிக்கையாளர்களை பாதுகாப்பதில் செயலற்ற கணக்குகளை நீக்குவது நன்மை அளிக்கும். ஒரு கணக்கு முழுமையாக செயலிழந்து இருக்கும்போது அதனை பயன்படுத்தப்படாத போது பாதுகாப்பு அச்சுறுதல்கள் கண்காணிக்கப்படாததால் அத்தகைய கணக்குகள் பாதுகாப்பு மீறல்களுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடியவை என கண்டறியப்பட்டுள்ளது.

கூகுள் கணக்கை செயலில் வைத்திருப்பது எப்படி?

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நீங்கள் விட்டுச் சென்ற கணக்கில் உள்நுழைய வேண்டும். அடுத்து உங்கள் கணக்குகளை செயலில் வைத்திருக்க உதவும் செயல்பாடுகள் தோன்றும். பின்னர் ஏதேனும் மின்னஞ்சல் அனுப்பவும். கூகுள் டிரைவை பயன்படுத்த வேண்டும். யூடியூப் வீடியோவை பாருங்கள். கூகுள் பிளே ஸ்டோரில் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும். கூகுள் தேடலை பயன்படுத்தவும். மூன்றாம் தரப்பு பயன்பாடு அல்லது சேவையில் உள் நுழைவதற்கு google உடன் உள்நுழையவும் நீங்கள் இரண்டு ஆண்டுகளாக உங்கள் google கணக்கை பயன்படுத்தாவிட்டாலும் உங்கள் கணக்கின் மூலம் ஏற்கனவே சந்தா அமைக்கப்பட்டிருந்தால் கூகுள் உங்கள் கணக்கை நீக்காது. எனவே குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தாத மற்றும் உள் நுழையாமல் இருக்கும் ஜிமெயில் கணக்குகளை இப்படி ஆக்டிவேட் செய்து கொள்ள முடியும்.