முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனமான மோட்டோரோலா புதிய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்ய உள்ளது. Moto G84 5G ஸ்மார்ட் போன் சமீபத்தில் அறிமுகம் செய்வதாக அறிவித்த நிலையில் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த புதிய மாடல் ஸ்மார்ட் போன் செப்டம்பர் 1ஆம் தேதி சந்தைக்கு வரும். இதன் விலை 20 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 5000 mAh பேட்டரி அம்சம் உள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு motorola களம் இறக்கும் இந்த போன் புதிய வடிவத்தில் உள்ளது.