மெட்டா நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் வாட்ஸ்அப் செயலியை கோடிக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். காரணம் வாட்ஸ்அப் end-to-end encrypted message மெசேஜ் சேவையை பயனர்களுக்கு வழங்குவதுதான். மேலும் அண்மை காலமாக வாட்ஸ்அப் தன் பயனர்களுக்கு உதவக்கூடிய அடிப்படையில் புது அப்டேட்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது Chat Lock அம்சத்தை வாட்ஸ்அப் கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் வாட்ஸ்அப்-ல் தனிப்பட்ட ஒருவருடைய Chat box-ஐ பிறர் பார்க்க முடியாத அளவிற்கு நாம் லாக் செய்து வைத்துக் கொள்ளலாம்.

அதை உங்களது கைரேகை (அ) பாஸ்வேர்ட் பதிவிட்டால் மட்டுமே ஓபன் செய்ய இயலும். இந்த புது அம்சம் இப்போது பீட்டா பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி வாட்ஸ்அப்-ல் நீங்கள் லாக் செய்து வைத்திருக்கும் தனிப்பட்ட நபர் அனுப்பும் வீடியோக்கள் மற்றும் ஆடியோ, இமேஜ் ஆகியவை உங்களது கேலரியில் பதிவிறக்கம் செய்யப்படாது. நீங்கள் அனுமதித்தால் மட்டும்தான் பதிவிறக்கம் செய்ய முடியும்.