உங்களிடம் இணைய இணைப்பு இல்லாத நேரத்தில், ​​நீங்கள் நேரத்தை கடக்க கூகுளின் ஆஃப்லைன் டைனோசர் கேம் கிடைக்கும். இந்த கேம்மானது பிரவுசர் பக்கத்தில் விளையாடும் வசதியினை வழங்குகிறது. உங்களிடம் இணைய இணைப்பு இல்லாத சமயத்தில் அதனை இயக்குவதற்கு அந்த பக்கத்தை கிளிக் செய்தால் போதும். தேடல் பெட்டியில் Askew என தட்டச்சு செய்து Enterஐ அழுத்த வேண்டும். அப்போது ஒரு பக்கமாக சாய்ந்திருக்கும். இது புதுவித அனுபவத்தினை கொடுக்கும்.

எனினும் கவலைப்பட வேண்டாம், திரையில் எந்த பிரச்சனையும் இருக்காது. உங்களின் இணையப்பக்கத்தில் Google Orbit என்று டைப் செய்து தேடலை கிளிக் செய்யவும். அப்போது “Google Sphere-Mr.Doob” என இருக்கும். அதனை கிளிக் செய்வதன் வாயிலாக உங்களது முகப்புப்பக்கத்தை ஒரு வட்ட அடிப்படை நிலைக்கு கொண்டு வரும். அங்கு நீங்கள் உங்களது சுட்டியை நகர்த்தி பூமியை சுற்றிவரலாம்.

இது உங்களுக்கு ஒரு சுவாரஸ்ய அனுபவத்தினை வழங்குகிறது. உங்களிடம் நாணயம் இல்லையெனில் நீங்கள் டாஸ் செய்யவேண்டும் என்றால் கூகுளின் உதவியைப் பெறலாம். Flip A Coin என்று டைப் செய்து Enterஐ அழுத்த வேண்டும். நாணயத்தைப் போன்று ஒருபுறம் தலைகளும் மறுபுறம் வால்களும் இருக்கும். நீங்கள் விரும்பக்கூடிய பக்கத்தில் கிளிக் செய்ய வேண்டும். அப்போது கூகுள் உங்களுக்காக டாஸ் செய்யும்.