உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதே சமயம் பயணங்களின் பாதுகாப்புக்கும் எந்தவித இடையூறும் இல்லாத வகையில் சமீபத்தில் ஈமெயில் மூலமாக whatsapp அக்கவுண்ட் லாகின் செய்யும் வசதி வழங்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் ஒரு whatsapp செயலியில் ஒன்றுக்கும் மேற்பட்ட அக்கவுண்ட்டை லாகின் செய்யும் அப்டேட்டும் வழங்கப்பட்ட நிலையில் தற்போது தரம் குறைவாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை hd முறையில் தெளிவாக பயனர்களுடன் பகிரும்படி புதிய அம்சத்தை whatsapp நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது முதலில் வீடியோவில் இடது புறத்தில் உள்ள சிறிய hd என்பதை கிளிக் செய்து தேவையான வீடியோவை தேர்வு செய்து பயனர்களுக்கு 720p தரத்துடன் பகிரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.