தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை சார்பில் வேட்பாளர்களின் முகவர்களுக்கு மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் மையத்திற்கு உள்ளே வருபவர்கள் சொந்தமாக பேனா அல்லது பென்சில் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது;

இவை தேர்தல் அதிகாரிகளாலேயே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மையத்திற்குள் 17C படிவம், நோட் பேட் மற்றும் இரும்பு பொருட்கள் இல்லாத எழுதும் நோட்டுப் புத்தகங்கள் ஆகியவற்றை மட்டுமே கொண்டு செல்ல அனுமதி உண்டு.

அதேவேளையில் செல்போன், கால்குலேட்டர், ப்ளூடூத் இயர்போன், ஸ்மார்ட் வாட்ச் போன்ற மின்னணு சாதனங்களுக்கும், சிகரெட், இ-சிகரெட் மற்றும் மது போன்ற பொருட்களுக்கும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோவை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.