தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (மே 4) காலை 8 மணிக்குத் தொடங்க உள்ள நிலையில், அரசியல் களம் போர்க்களமாக மாறியுள்ளது. இந்தச் சூழலில், ஆளுங்கட்சியான திமுகவிற்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடியான கருத்துக்களை முன்வைத்துள்ளார். “கருத்துக்கணிப்பு என்ற பெயரில் ஊடகங்கள் ஆளுங்கட்சியின் விருப்பத்தையே மக்கள் மீது திணிக்க முயற்சி செய்கின்றன; ஆனால் எதார்த்தத்தில் மக்கள் மாற்றத்தை ஏற்கனவே தீர்மானித்துவிட்டார்கள்” என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியை எந்தவொரு புதிய கட்சியும் (தவெக போன்றவை) சிதைக்கவில்லை என்றும், அதிமுக-என்டிஏ கூட்டணி அமோக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி அவர்கள் மீண்டும் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்பது உறுதி என்றும் அவர் வாதிட்டார். தற்போது வெளியாகியுள்ள கணிப்புகளுக்கு நேர்மாறான ஒரு முடிவைத் தமிழ்நாடு நாளை பார்க்கும் என்று சவால் விடுத்துள்ள ராஜேந்திர பாலாஜியின் இந்தப் பேச்சு, தேர்தல் முடிவுகளுக்கு முந்தைய பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.
