தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் ‘தொங்கு சட்டசபை’ அமைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.  சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “தமிழகத்தில் தற்போது நடிகர் விஜய் பெயரில் பெரிய அளவில் சூதாட்டம் நடைபெற்று வருகிறது. தொங்கு சட்டசபை அமையும் என்பது போன்ற தகவல்கள் அனைத்தும் இந்தச் சூதாட்டக் கும்பல் பரப்பும் வெறும் வதந்திகளே ஆகும்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “தேர்தலுக்கு முன்னதாக திமுக-வை முன்னிறுத்தி இந்தச் சூதாட்டக் கும்பல் விளையாடியது. இப்போது தேர்தல் முடிந்த பிறகு, விஜய்யை வைத்து அதே பாணியிலான சூதாட்டம் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, இத்தகைய வதந்திகளைப் பரப்புபவர்கள் நிச்சயம் ஏமாற்றமடைவார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும் தேர்தல் முடிவுகள் குறித்துப் பல்வேறு கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில், திருமாவளவனின் இந்த ‘சூதாட்டப் புகார்’ அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.