சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி பல தரப்பினரும் போராட்டம் நடத்துவது இப்போது ஒரு “ஃபேஷன்” ஆகிவிட்டது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வாழ்வாதாரத்திற்காகப் போராடும் ஊழியர்களின் கோரிக்கையை இப்படிச் சுலபமாக அமைச்சர் விமர்சித்திருப்பது போராட்டக்காரர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

​இதைக் கேட்டு சும்மா இருப்பாரா அண்ணாமலை? அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அவர், “அரசுத் துறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த ஊழியர்களாக இருப்பவர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு ஆட்சிக்கு வந்த திமுக, இப்போது அவர்களைக் கொச்சைப்படுத்துவது முறையா?” என்று விளாசியுள்ளார். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், போராடுபவர்களைக் கிண்டல் செய்வது திமுகவின் ஆணவத்தைக் காட்டுகிறது என அண்ணாமலை சாடியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.