தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “என்னை அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி சொன்னது பழைய செய்தி” என்று நச் என்று ஒரு போடு போட்டார். அதாவது, காலங்கள் மாறும்போது மனங்களும் மாறும் என்ற பாணியில் அவர் பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், இதற்கு மதுரை பாணியில் காரசாரமாக பதிலடி கொடுத்துள்ளார் செல்லூர் ராஜு.
“ஓபிஎஸ் மீடியாக்களுக்கு முன்னால் சும்மா நாடகமாடுகிறார்; அவர் நிஜமாகவே கட்சியில் இணைய விரும்பினால், யாரிடம் போய்க் கேட்க வேண்டுமோ அங்கே கேட்காமல், ஏன் இப்படி ஊடகங்கள் மூலம் அனைவரையும் குழப்புகிறார்?” எனச் சீறியுள்ளார். இந்த மோதலால் அதிமுக வட்டாரத்தில் மீண்டும் பழைய பஞ்சாயத்துகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.
