வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 12 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆதார் அட்டை,தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி/ அஞ்சல் புத்தகம், ஓட்டுநர் உரிமை, பான் கார்டு, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மக்களவை உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.