மத்திய அரசின் பாரத் அரிசி மற்றும் கோதுமையை ரயில் நிலையங்களின் நுழைவாயிலில் விற்பனை செய்ய ரயில்வே வாரிய உத்தரவிட்டுள்ளது. முதல் கட்டமாக மூன்று மாதங்களுக்கு சோதனை முறையில் விற்பனை செய்ய ரயில்வே வாரியத்தின் பயணியர் வர்த்தக பிரிவு தலைமை இயக்குனர் நீரஜ் சர்மா அனுமதி அளித்துள்ளார். ஒரு கிலோ அரிசி 29 ரூபாய்க்கும், ஒரு கிலோ கோதுமை 27.50-க்கும் விற்பனை செய்யப்படும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.