மக்களவை தேர்தல் தொடர்பாக மோடி தலைமையில் அக்கட்சித் தலைவர்கள் டெல்லியில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் பத்திர விவகாரம், கெஜ்ரிவால் கைது தொடர்பாக எதிர்க்கட்சிகள் பாஜக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்கள். இது தேர்தல் நேரத்தில் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்ற பேச்சுக்களும் எழுந்துள்ளன. இந்த கூட்டத்தில் வேட்பாளர்கள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது.