மேற்கு வங்க மாநிலத்தில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியின் தலைவர்கள் மீது அடுத்தடுத்து முட்டை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டு வரும் அதிர்ச்சிச் சம்பவங்கள் தற்பொழுது இந்திய அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய புயலையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளன.

மேற்கு வங்கத்தின் பஸ்சிம் பர்தமான் மாவட்டத்தில் உள்ள ராணிகஞ்ச் நகரில், பாஜக தலைவர் ரவி கேஷரி கொடுத்த புகாரின் பேரில், பாஜக தொண்டர்களைத் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட டிஎம்சி இளைஞரணித் தலைவர் சௌமித்ரா பானர்ஜியை போலீஸார் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு திரண்டிருந்த ஆக்ரோஷமான கூட்டம், “சோர்.. சோர்.. சோர்” (திருடன்.. திருடன்) என்று ஆவேசமாகக் கத்தியபடி சௌமித்ரா பானர்ஜி மீது சரமாரியாக முட்டைகளை வீசித் தாக்குதல் நடத்தியதை அடுத்து, போலீஸார் உடனடியாகச் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்து அவரைப் பத்திரமாக வாகனத்தில் ஏற்றி நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்த அதிரடிச் சம்பவம் நடப்பதற்குச் சரியாக ஒரு நாளைக்கு முன்புதான், கொல்கத்தாவில் உள்ள முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜியின் வீட்டின் முன்பாக, கட்சியின் மூத்த தலைவர் குணால் கோஷ் ஒரு கூட்டத்தை முடித்துவிட்டு வெளியே வந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துக் கொண்டிருந்த போது, சந்தன் என்ற உள்ளூர் இளைஞர் ஒருவர் அவர் மீது திடீரென முட்டையை வீசித் தாக்கினார்.

இசட் (Z) பிரிவு பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் மமதா பானர்ஜியின் வீட்டின் அருகிலேயே இந்தத் தாக்குதல் நடந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும், நூலிழையில் தனது கண் தப்பியதாகவும், இல்லையெனில் கண் கண்மூடித்தனமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் என்றும் வேதனை தெரிவித்துள்ள குணால் கோஷ், அங்கு போலீஸார் இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இது மக்கள் கோபம் அல்ல, தன்னை முடக்க நினைக்கும் பாஜக ரவுடிகளின் வேலை என்றும் மிகக் காரசாரமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்கனவே உட்கட்சி பூசல்களும், அடுத்தடுத்த ராஜினமாக்களும் ஓடிக்கொண்டிருக்கும் இந்த இக்கட்டான வேளையில், அக்கட்சியின் முக்கியப் புள்ளிகள் மீது பொதுவெளியில் நடத்தப்பட்டுள்ள இந்த முட்டை வீச்சுத் தாக்குதல்கள், தற்பொழுது சோசியல் மீடியா ஏரியாக்களில் காட்டுத்தீயாய் பரவி, “அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என அசால்ட்டாக விட முடியாது பாஸ்!” என்று நெட்டிசன்கள் மத்தியில் பயங்கரமாக விவாதிக்கப்பட்டு இணையத்தை அடியோடு அதிர வைத்து வருகிறது.