2025 ஆம் ஆண்டில் ஜனவரி 1 முதல் ஜூலை 15 வரை, டெல்லி நகரில் மொத்தமாக 2,468 கார் திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதன் அடிப்படையில், தினசரி சராசரியாக 13 கார்கள் திருடப்படுகின்றன என டெல்லி காவல்துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 2,732 கார்கள் திருடப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு சுமார் 10 சதவீதம் குறைவாகவே உள்ளதென்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக ஆட்டோ மற்றும் கார் திருட்டுகள் அதிகரித்து வந்த நிலையில், போலீசார் மப்டி சீருடையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர். குறிப்பாக இரவு நேரங்களில் ரோந்து பணிகளை அதிகரித்து, முக்கிய சந்தைகள், நிர்மனிக்காத இடங்கள் மற்றும் நிறுத்தப்பட்ட வாகனங்கள் மீது தீவிர கண்காணிப்பை மேற்கொண்டதால், திருட்டு சம்பவங்களில் கணிசமான குறைவு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த நடவடிக்கைகள் தொடரும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.