அடுத்ததாக நடைபெற உள்ள ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, இந்தியா – பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 14ஆம் தேதி மோதும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டிருப்பது, பெரும் எதிர்ப்பு மற்றும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

இந்த விவகாரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அமைப்பின் மக்களவைக்கூட்ட உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சனம் வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது: “பாகிஸ்தானுடனான எந்தவொரு கிரிக்கெட் போட்டியையும் நீங்கள் எங்கு நடத்தினாலும், இந்தியா முழுவதும் உள்ள மக்கள் அதனை கண்டிப்பாக எதிர்ப்பார்கள் என்பதை பிசிசிஐ மறக்கக்கூடாது. இந்திய பாதுகாப்புப் படைகள் உயிரை பணையாகக் கொடுத்து நாடு பாதுகாக்கும் நேரத்தில், அந்த நாட்டுடன் விளையாட்டு நடத்துவது நியாயமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர், “இறுதி வரை நாடு பாதுகாப்பிற்காக போராடும் வீரர்களின் ரத்தத்தில் பிசிசிஐ லாபம் பார்க்கக்கூடாது. ஒரு பக்கம் நாட்டின் முக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடந்து வருகிறது என அறிவிக்க, மறுபக்கம் பாகிஸ்தானுடன் விளையாடுகிறீர்கள் என்பதே வேதனையை ஏற்படுத்துகிறது” என தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது பதிவு சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

“>