பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மூன்று அமைச்சர்கள் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியில் தவெக பிரச்சாரப் பாடல் ஒலிபரப்பப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. நேற்று காஞ்சிபுரம் பள்ளி, இன்று கோவை அரசு மருத்துவக் கல்லூரி என கல்விக் கூடங்களை அரசியல் மேடைகளாக மாற்றுவது ஆளுங்கட்சிக்கு அழகல்ல. அரசு நிகழ்ச்சிகளில் என்ன பாடல்களை ஒலிபரப்ப வேண்டும் என்ற அடிப்படை புரிதல் கூட கல்லூரி நிர்வாகத்திற்கு இல்லையா?
கல்வி நிலையங்களை கலையரங்குகளாக மாற்ற முயற்சிக்கிறாரா முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள்?
தவெக அமைச்சர்கள் திரு. @arunraajkg, திரு. @tvksampathcbe மற்றும் திரு. @VigneshTvkCbe ஆகியோர் பங்குபெற்ற கோவை அரசு மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில், தவெக கட்சியின் பிரத்யேகப்… pic.twitter.com/fyGYrQ5v3Z
— Nainar Nagenthran (@NainarBJP) June 21, 2026
நிகழ்ச்சி நிரல் தயாரிப்பில் இதுபோன்ற அரசியல் சார்ந்த பாடல்களை பயன்படுத்தக் கூடாது என்பது அங்கிருந்த ஒருவருக்குக் கூட தெரியாதா முதலமைச்சர் விஜய் அவர்களே, அரசு நிகழ்ச்சிகள் உங்கள் புகழ் பாடும் மேடைகள் அல்ல என்பதை உங்கள் கட்சியினருக்கும் அதிகாரிகளுக்கும் எப்போது உணர்த்தப் போகிறீர்கள்? இனிவரும் காலங்களில் அரசு நிகழ்ச்சிகளை அரசியல் கலப்பின்றி, முறையான நிகழ்ச்சி நிரலுடன் நடத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவத்திற்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
