தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் காதல் முறிவுக்குப் பிறகு, முன்னாள் காதலி மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேரை கத்தியால் குத்திய 22 வயது இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஹைதராபாத்தின் ராய்துர்கம் பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
மேலும் குற்றம் சாட்டப்பட்ட அந்த வாலிபர், பெண்ணின் வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து இந்த கொடூரத் தாக்குதலை நடத்தியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலில் காயமடைந்த முன்னாள் காதலி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நால்வர் என மொத்தம் ஐந்து பேர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ராய்துர்கம் காவல்துறையினர், தப்பியோட முயன்ற அந்த 22 வயது வாலிபரை விரைந்து செயல்பட்டு கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
