டெல்லி: தலைநகர் டெல்லியில் வழக்கம்போல் நடந்து சென்ற பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு பசு தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊருக்கு சென்றுவிட்டு பெட்டிகள் மற்றும் பொட்டலங்கள் வைத்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த குழுவை, சடாரென விரட்டிய பசு, அந்த குழுவில் இருந்த இளம்பெண் ஒருவரை முட்டி கீழே வீழ்த்தியது. எதிர்பாராத இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்குப் பிறகு, அந்த குழுவில் இருந்த மற்றொரு பெண் ஒருவர், மற்றொரு பெண்ணுடன் பைக்கில் பின் சென்று தப்ப முயன்றபோதும், அந்த பசு பைக்கின் பின் தொடர்ந்து, அவர்களைவும் முட்ட முயன்றது. அச்சத்துடன் அந்த பெண்கள் அருகில் உள்ள ஒரு வீட்டுக்குள் ஓடிச் சென்று தப்பினர். வழக்கமாக மிதமாக நடக்கும் பசுக்கள் இவ்வாறு தாக்குதல் நடத்துவது ஏன் என்பதைப் பற்றி அப்பகுதி மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
आवरा पशुओं का आतंक दिल्ली में खतरनाक हैं. अगर सड़क पर आप चल रहे हैं तो भगवान ही मालिक हैं. देखिए कैसे इन लड़कियों ने अपनी जान बचाई है. pic.twitter.com/1IsDkOR2Ty
— Priya singh (@priyarajputlive) July 27, 2025
“>
பசுவின் இந்த விசித்திரமான நடத்தை காரணமாக, அந்தப் பகுதியில் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். காவல்துறையும், விலங்குகள் பராமரிப்பு துறையும் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
