உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழக விடுதியில், ஒரு மாணவியை மற்ற மாணவிகள் சேர்ந்து கொடூரமாகத் தாக்கும் வீடியோ வெளியாகி இணையத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோரைக் குறித்துத் தவறாகப் பேசியதாகக் கூறப்படும் ஒரு தகராறில், அனுஷ்கா என்ற மாணவியைச் சுற்றி வளைத்த சக மாணவிகள், அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

“நீ அழுற வரைக்கும் விடமாட்டோம், ஒவ்வொரு சாரிக்கும் ஒவ்வொரு அடி விழும்” என்று மிரட்டி அந்த மாணவியை அடிக்கும் காட்சிகள் பார்ப்பவர்களை அதிர வைத்துள்ளது. அந்த மாணவி “வலிக்குது, ரத்தம் வருது” என்று கெஞ்சியும், மற்ற மாணவிகள் அதைக் கேலி செய்துவிட்டுத் தொடர்ந்து தாக்கியுள்ளனர். ஒரு மாணவி கையைப் பிடித்துக் கொள்ள, மற்றவர்கள் கன்னத்தில் அறைந்து அவரை அசிங்கப்படுத்தியுள்ளனர்.
<a href=”http://

 

 

இந்தச் சம்பவம் ராகிங் கிடையாது, இது ஒரு திட்டமிட்ட வன்முறை என்று நெட்டிசன்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கடும் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த வீடியோ வைரலான போதிலும், பல்கலைக்கழகத் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமான விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. இது போன்ற சம்பவங்கள் கல்லூரி வளாகத்தில் மாணவர்களின் பாதுகாப்பு குறித்துப் பெரிய கேள்விக்குறியை எழுப்பியுள்ளது.