மும்பையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் ஒரு பெண் கொடூரமாகத் தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதையில் இருந்ததாகக் கூறப்படும் ஒரு நபர், ஒரு பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென அவரை சரமாரியாகத் தாக்கத் தொடங்கினார்.
அந்தப் பெண்ணை முகத்தில் குத்தியும், அறைந்தும் அந்த நபர் வன்முறையில் ஈடுபட்டபோது, அங்கிருந்தவர்கள் வேடிக்கை பார்த்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தட்டிக்கேட்க வந்த மற்றொரு பெண்ணையும் அந்த நபர் மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். அந்தப் பெண் தாக்குதலைத் தனது செல்போனில் பதிவு செய்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர், அவரையும் தாக்க முயன்றார்.
<a href="http://
“>
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுவரை இந்த விவகாரத்தில் அந்த நபர் மீது எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
