அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் உலக நாடுகள் மீது விதித்திருந்த முந்தைய வரிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த சட்டப்பூர்வ மாற்றத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவுடன் வர்த்தக உறவு வைத்துள்ள அனைத்து நாடுகளுக்கும் பொதுவான10% இறக்குமதி வரியை டிரம்ப் தற்போது அறிவித்துள்ளார்.

மேலும் முன்னதாக இந்தியப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த 25% வரி, சமீபத்தில் 18% ஆகக் குறைக்கப்பட்டிருந்தது. தற்போதைய புதிய உத்தரவின் மூலம் அது மேலும் சரிந்து 10% என்ற நிலையை எட்டியுள்ளது. இந்த வரிக்குறைப்பு நடவடிக்கை இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.

இது குறிப்பாக, அமெரிக்காவிற்கு அதிக அளவில் பொருட்களை ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனங்களுக்கு இது கூடுதல் லாபத்தையும், சர்வதேச சந்தையில் இந்தியப் பொருட்களுக்கான போட்டியிடும் திறனையும் அதிகரிக்கும். இந்த புதிய வரி விதிப்பு முறையானது வரும் பிப்ரவரி 24-ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலகளாவிய வர்த்தகச் சூழலில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.