குஜராத் மாநிலத்தில், தனது அனுமதியின்றி சொல்லாமல் கொள்ளாமல் தாய் வீட்டிற்குச் சென்று தங்கிய மனைவியை, அவரது கணவர் ஆத்திரத்தில் அறைந்துள்ளார். இது தொடர்பாக மனைவி அளித்த புகாரின் பேரில், கணவர் மீது குடும்பக் கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், கணவருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து கணவர் தரப்பில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

​இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளார். “மனைவியை ஒருமுறை அறைந்த சம்பவத்தை குடும்பக் கொடுமை அல்லது கொடுமைப்படுத்துதல் (Cruelty) என்ற பிரிவின் கீழ் கொண்டு வர முடியாது” என்று நீதிபதி சுட்டிக்காட்டினார். ஆத்திரத்தில் நடந்த இந்த ஒரு சிறு சம்பவத்திற்காக ஓராண்டு கடுங்காவல் தண்டனை என்பது தேவையற்றது எனக் கூறி, கணவரை விடுவித்து அதிரடியாக உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பு இப்போது சமூக வலைதளங்களில் ஆதரவாகவும், எதிராகவும் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.