தமிழக அரசியல் களம் தற்பொழுது முன்எப்போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அதிர்வலைகளையும், அரசியல் மாற்றங்களையும் சந்தித்து வருகிறது.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை, திடீரென கட்சியில் இருந்து விலகி புதிய அரசியல் இயக்கம் தொடங்கப் போவதாக அறிவித்துள்ள அதிரடித் தகவல், கமலாலயக் கூடாரத்தையே அடியோடு உலுக்கியெடுத்துள்ளது.
இந்த பெரும் ஷாக்கில் இருந்து மீள்வதற்குள், நிலைமையைக் கட்டுப்படுத்த தமிழக பாஜக தலைமை தற்பொழுது போர்க்கால அடிப்படையில் களமிறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, திருச்சியில் நாளை மறுநாள் (ஜூன் 7) பாஜக மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் கட்சியின் அனைத்து முக்கிய நிர்வாகிகளும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்றும், தவறினால் அவர்கள் மீது மிகக் கடுமையான ‘ஒழுங்கு நடவடிக்கை’ பாயும் என்றும் தமிழக பாஜக தலைமை தொலைபேசி வாயிலாக ஒவ்வொருவருக்கும் ரகசியமாக அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்ணாமலையின் இந்த விஸ்வரூப முடிவால் பாஜாகவின் வாக்கு வங்கி மொத்தமாகச் சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், டெல்லி மேலிடம் தற்பொழுது கடும் அதிர்ச்சியிலும் கலக்கத்திலும் உறைந்துள்ளது.”
