தமிழக அரசியல் வட்டாரங்களில் தற்பொழுது நிலநடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அதிரடித் தகவல் ஒன்று வெளியாகி அறிவாலயக் கூடாரத்தையே நிலைகுலைய வைத்துள்ளது.

திமுகவின் முக்கியத் தூணாகவும், துணை முதல்வர் உதயநிதியின் தனிப்பட்ட தேர்தல் வியூக வகுப்பாளராகவும் (Strategist) செயல்பட்டு வந்த சுனில், தற்பொழுது உதயநிதி தரப்புடன் ஏற்பட்ட அதிருப்தியால் அதிரடியாக விலகியுள்ளார் என்ற பரபரப்பு தகவல் கசிந்துள்ளது.

2026 தேர்தல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) இருக்கும் அசுரத்தனமான செல்வாக்கு மற்றும் கள யதார்த்தம் குறித்து சுனில் ஏற்கனவே உதயநிதியிடம் எச்சரித்திருந்ததாகவும், ஆனால் ‘பென்’ (PEN) நிறுவனத்தின் வெற்றுப் புள்ளிவிவர அறிக்கையை மட்டுமே நம்பி திமுகவினர் தேர்தல் பணி செய்ததால் அவர் கடும் அப்செட்டில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்பொழுது உதயநிதிக்கு டாட்டா காட்டிவிட்டு வெளியேறியுள்ள சுனில், அடுத்ததாகத் தவெக மற்றும் காங்கிரஸ் (Congress) கட்சிகளுக்குத் தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுக்கும் மெகா பணியில் இறங்க உள்ளதாக வெளியாகி இருக்கும் ஹாட் ரிப்போர்ட், திமுக மேலிடத்திற்குப் பெரும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் கொடுத்துள்ளது.”