“தமிழக அரசியல் களம் தற்பொழுது முன்எப்போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அதிரடி திருப்பங்களையும், அடுத்தடுத்த விக்கெட் சரிவுகளையும் சந்தித்து வருகிறது.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்சியை விட்டு விலகி புதிய இயக்கம் தொடங்கப்போவதாக அறிவித்த அதிர்ச்சி அடங்குவதற்குள், தற்பொழுது தமிழக பாஜக மாநிலத் துணைத்தலைவரான ஏ.ஜி.சம்பத் அவர்கள் தனது பதவியையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பையும் அதிரடியாக ராஜினாமா செய்துள்ள பிரேக்கிங் தகவல் வெளியாகி கமலாலயக் கூடாரத்தையே அடியோடு நிலைகுலைய வைத்துள்ளது.

திருச்சியில் நாளை மறுநாள் (ஜூன் 7) பாஜக மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடக்கவிருக்கும் அதே வேளையில், அதற்கு முன்பாகவே மாநிலத் துணைத்தலைவர் ஏ.ஜி.சம்பத் கட்சியை விட்டு வெளியேறியிருப்பது தமிழக பாஜகவின் வாக்கு வங்கிக்கு விழுந்த அடியாகப் பார்க்கப்படுகிறது.

அண்ணாமலையைத் தொடர்ந்து ஏ.ஜி.சம்பத்தும் டாட்டா காட்டியுள்ளதால், தமிழக தாமரை கட்சியில் விலகல் படலம் தீவிரமடைந்து ஒட்டுமொத்த டெல்லி மேலிடத்தையும் கடும் அதிர்ச்சியிலும் கலக்கத்திலும் ஆழ்த்தியுள்ளது.”