தமிழ்நாடு அரசியலில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ஒரு வரலாற்றுத் திருப்பமாக, எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தின் போது, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யைக் குறித்தும் தவெக அரசை மையப்படுத்தியும் கடுமையான அவதூறு கருத்துகளையும் தனிப்பட்ட விமர்சனங்களையும் அவர் முன்வைத்திருந்தார்.
இந்த விவகாரம் அரசியல் அரங்கில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அரசு தரப்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு இந்த அதிரடி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசியலைப் பொறுத்தவரை தலைவர்களின் மோதலும் கைது நடவடிக்கைகளும் புதிய வரலாறல்ல என்பதை கடந்த கால நிகழ்வுகள் நினைவுபடுத்துகின்றன. கடந்த 1996-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதி உத்தரவின் பேரில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா கைது செய்யப்பட்டார்.
அதற்குப் பதிலடியாக 2001-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதியைக் கைது செய்து அரசியல் களத்தில் அனலைக் கிளப்பினார்கள்.
தற்போது அதே பாணியில், ஆகஸ்ட் 2026-ல் முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருப்பது ஒட்டுமொத்த அரசியல் சக்கரமும் முழுமையாக ஒரு வட்டத்திற்கு வந்துவிட்டதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த சில சர்ச்சைக்குரிய சம்பவங்களையும் சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் அரசியல் விமர்சகர்கள் விவாதித்து வருகின்றனர்.
The wheel of time has turned once again in Tamil Nadu politics.
1996: Then CM Karunanidhi had LoP Jayalalithaa arrested.
2001: Then CM Jayalalithaa had Karunanidhi arrested.
4 August 2026: CM Joseph Vijay has now had LoP Udhayanidhi Stalin arrested.
History has come full… pic.twitter.com/UwvaNkR3jL
— Amit Kumar Sindhi (@AMIT_GUJJU) August 4, 2026
“>
தற்போதைய இந்த அதிரடி கைது நடவடிக்கையானது தமிழக அரசியலில் அடுத்த கட்ட திருப்பங்களையும் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் மோதிக்கொள்ளும் சூழலையும் மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
