வாழ்க்கையில் சின்னச் சின்ன கஷ்டங்கள் வந்தாலே சோர்ந்து போய் விடுபவர்களுக்கு மத்தியில், குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த 103 வயது பாட்டி காசிபா ஒரு மிகப்பெரிய பாடமாகத் திகழ்கிறார். வதோதரா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் ஃபைன் ஆர்ட்ஸ் ஃபேகல்டி அருகே ஒரு சிறிய டீக்கடையை நடத்தி வரும் இவர், இந்த வயதிலும் இஞ்சி தட்டுவது முதல் கடையை முழுமையாக நிர்வகிப்பது வரை அனைத்து வேலைகளையும் தானே செய்கிறார்.

கூன் விழுந்த முதுகு இருந்தாலும், நூறு ஆண்டுகால மன உறுதியுடன் அவர் உழைப்பதைப் பார்த்து, “இவங்ககிட்ட கத்துக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு!” என இணையவாசிகள் வியந்து கமெண்டுகளைத் தட்டி வருகின்றனர்.​சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பத்திரிகையாளர் சாக்ஷி சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 1993-ஆம் ஆண்டிலிருந்தே இந்தப் பாட்டி இதே சுறுசுறுப்புடன் உழைப்பதாக அந்தப் பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் இருப்பவர்களுக்குத் தெம்பூட்டும் விதமாக அமைந்துள்ள இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “அம்மாடி… இதுதான் நிஜமான கெத்து, இவங்கதான் ரியல் இன்ஸ்பிரேஷன்!” எனப் பாராட்டித் தள்ளுகின்றனர். உழைப்புக்கு வயது ஒரு தடையல்ல என்பதை உலகுக்கே உரக்கச் சொல்லும் காசிபா பாட்டியின் இந்த வைரல் வீடியோ இப்போது இன்டர்நெட்டில் செம ட்ரெண்டிங்!