சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான நடன வீடியோக்கள் வெளியானாலும், தற்போது வைரலாகி வரும் ஒரு பாட்டியின் ‘நாகின்’ நடனம் நெட்டிசன்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது.

பல பெண்கள் கூட்டமாக நடனமாடும் ஒரு நிகழ்ச்சியில், அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த இந்தப் பாட்டி, புகழ்பெற்ற “நாகின்” (பாம்பு நடனம்) பாடலுக்கு மிகவும் உற்சாகமாக நடனமாடியுள்ளார். கைகளை பாம்பைப் போல அசைத்தது மட்டுமன்றி, பாம்பு போலவே நாக்கை நீட்டி அவர் காட்டிய முகபாவனைகள் பார்ப்பவர்களைச் சிரிப்பலைகளில் ஆழ்த்தியுள்ளது.

இந்த 14 வினாடி வீடியோவை ஹெமந்த் மௌரியா என்பவர் தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ளார். “பாட்டி இன்று நாகமணியைப் பெற்றால் தான் அடங்குவார் போல” என்ற நகைச்சுவையான தலைப்புடன் பகிரப்பட்ட இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் ரசித்துப் பார்த்து வருகின்றனர்.

“பாட்டிக்கு தனது கடந்த கால நினைவுகள் வந்துவிட்டதோ?” என்றும், “இவ்வளவு ஆபத்தான பாம்பை எங்கே பிடித்தீர்கள்?” என்றும் பயனர்கள் கிண்டலாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“>

 

வயதான காலத்திலும் கவலைகளின்றி மகிழ்ச்சியாக இருக்கும் பாட்டியின் இந்தத் தன்னம்பிக்கை பலருக்குப் பொழுதுபோக்காகவும் உத்வேகமாகவும் அமைந்துள்ளது.