ஒரு சிறுவன் சைக்கிளில் செல்லும்போது எதிர்பாராமல் அங்கிருந்த ஒரு பைக்கின் மீது மோதிவிடுகிறான். இதில் அந்தப் பைக்கின் பின்னால் இருந்த லைட் உடைந்துவிடுகிறது. தவறு செய்துவிட்டோமே என்று பயந்து அந்தச் சிறுவன் அங்கிருந்து ஓடிவிடவில்லை. மாறாக, அந்த லைட்டை சரிசெய்ய முயற்சி செய்கிறான். அது முடியாததால், பைக்கின் உரிமையாளர் வரும் வரை அந்த இடத்திலேயே பொறுமையாகக் காத்திருக்கிறான்.
பைக்கின் உரிமையாளர் வந்ததும், நடந்ததை மறைக்காமல் சொல்லி, அந்த லைட்டை சரி செய்யத் தன்னிடமிருந்த பணத்தைக் கொடுக்கிறான். சிறுவனின் இந்த நேர்மையைக் கண்ட உரிமையாளர் நெகிழ்ந்து போகிறார். அவனது நல்ல குணத்தைப் பாராட்டி, பணத்தை வாங்காமல் சிறுவனை அன்போடு மன்னித்து அனுப்பி வைக்கிறார். இந்த அழகான வீடியோ இப்போது இணையத்தில் பலரது மனதைக் கவர்ந்து வருகிறது.
