நான் ஆட்சிக்கு வந்தால் வட இந்தியர்களை அடி வெளுப்பேன் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேசியது சர்ச்சையானது. இந்நிலையில் இயக்குனர் நவீன் கூறியதாவது “வடவர் ஆதிக்கத்தை எதிர்ப்பது சரி. ஆனால் வடக்கில் இருந்து பிழைப்பு தேடி வரும் ஒடுக்கப்பட்ட பாட்டாளி சகோதரர்கள் மீது வன்மத்தை விதைப்பது சரியான அரசியல் அல்ல.

இந்த உலகம் அனைவருக்கும் பொதுவானது ஆகும்” என டுவிட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இவரது பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். முன்னதாக வட இந்தியர்களுக்கு ஆதரவாக அண்மையில் நடிகர் விஜய் ஆண்டனி கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.