ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

“ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு தூய்மை பணி செய்ய வந்தவர்கள் தான் அருந்ததியினர்” என்று சீமான் சமீபத்தில் பேசியிருந்தார். இந்நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை அருந்ததியின சமூகத்தினர் விரட்டி அடித்தனர். எங்களையே அவதூறாக பேசிவிட்டு எங்களிடமே ஓட்டு கேட்பீர்களா? என்று அவர்கள் கூச்சலிட்டதால் நாம் தமிழர் கட்சியினர் அங்கிருந்து விலகிச் சென்றனர்.