வடகிழக்கு மாநிலங்களின் அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. வடகிழக்குப் பிராந்தியங்களில் இயங்கி வந்த பல அரசியல் கட்சிகள் இப்போது ஒன்றாக இணைந்து ஒரே கட்சியாக உருமாறியுள்ளன. இது அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய 7 மாநிலங்களின் உரிமைகளுக்காகப் போராடும் ஒரு முக்கிய முடிவாகக் கருதப்படுகிறது. இந்த இணைப்பு தொடர்பாக முக்கியத் தலைவர்களான காண்ட்ரால் சங்கா, பிரத்யோத் மாணிக்கியா, டேனியல் லாங்சா, திகோன் உள்ளிட்டோர் டெல்லியில் ஆலோசனைகளை நடத்தினர்.
இதே போன்ற அரசியல் ஒன்றிணைப்புப் பேச்சு தென் இந்திய மாநிலங்களிலும் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் புதிய அரசியல் களம், வடகிழக்கு மாநிலங்களின் அரசியல் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
