தி.மு.க.வின் முக்கியத் திட்டங்களில் ஒன்றான அறிவுத் திருவிழா விரைவில் நடைபெறவுள்ள நிலையில், கட்சியின் இளைஞரணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான (DCM) உதயநிதி ஸ்டாலின் ஆற்றி வரும் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டிப் பேசியுள்ளார். உதயநிதி, இளைஞர்களைக் கட்சியில் ஈர்த்து, பாசறைகளை நடத்தி, அவர்களைப் பேச்சாளர்களாகவும் ஆய்வாளர்களாகவும் உருவாக்கி வருகிறார் என்று ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

உதயநிதியின் இந்தச் செயல்பாடுகளைப் பாராட்டிய ஸ்டாலின், “இதுதான் பெரியார், அண்ணா செய்த பணி” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒரு தந்தை என்பதைவிட, இயக்கத்தின் முதன்மைத் தொண்டனாக உதயநிதியின் செயல்பாட்டில் பெரும் மகிழ்ச்சி அடைவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அவரது இந்த உறுதியான செயல்பாடு, தி.மு.க.வின் எதிர்காலத்திற்கு மேலும் வலுசேர்க்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.