தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்ததாக சென்னையில் ஷூட்டிங் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக 14 வருடங்களுக்கு பிறகு திரிஷா நடிக்கிறார். லோகேஷ் – விஜய் கூட்டணியில் உருவாகிவரும் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.

அவ்வப்போது ‘லியோ’ படம் பற்றி ஏதேனும் ஒரு அப்டேட் எப்படியாவது வெளியாகி கொண்டு இருக்கிறது. அந்த வகையில், தற்போது அந்த படத்தில் நடித்து வரும் பிரபல மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் நடிகர் விஜய்க்கு மகனாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக மேத்யூ சுத்தமாக தாடி எல்லாம் எடுத்து, ஒரு இளம் பையன்போல் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் படத்தில் இயல் என்ற கேரக்டரை இயக்குநர் லோகேஷ் சஸ்பென்சாக வைத்துள்ளாரம்.