லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, பாலிவுட் பிரபலம் சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடிப்பில் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீசாகும் திரைப்படம் லியோ. இந்நிலையில் இதுகுறித்து பி[பேசிய சீமான், வேறு எந்தப் படங்களுக்கும் இல்லாத வகையில் லியோ படத்திற்கு மட்டும் இவ்வளவு நெருக்கடி தருவது ஏன் என   கேள்வி எழுப்பியுள்ளார்.

லியோவை வைத்து அரசியல் செய்யவில்லை எனக் கூறுவதே அரசியல் தான் என விமர்சனம் செய்த சீமான், தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு எல்லாம் தேவையில்லாத வேலை என தெரிவித்தார்.  மேலும், திமுக அரசு விஜய்யை தொந்தரவு செய்வது வெளிப்படையாக தெரிவதாகவும் சீமான் குற்றம்சாட்டினார்.