தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் தேனி, திண்டுக்கல், திருப்பூர்,நீலகிரி, ஆகிய ஐந்து மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.