தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது . இந்த திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியை ரத்து செய்யப்படுவதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற இருந்த நிலையில் தற்போது பட குழு திடீரென ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நடத்தப்படவில்லை என்று அறிவித்துள்ளது .

இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதில் அரசியல் அழுத்தம் உள்ளிட்ட காரணங்கள் இல்லை எனவும் அதிக டிக்கெட்டுகள் கோரிக்கை மற்றும் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு விழாவை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம் என்று பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.