தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய் மற்றும் சங்கீதாவின் 26 ஆண்டுகால திருமண வாழ்க்கை தற்போது ஒரு இக்கட்டான கட்டத்தை எட்டியுள்ளது. 1999-ல் சென்னையில் கோலாகலமாக நடந்த இவர்களது திருமண வாழ்க்கை, தற்போது விவாகரத்தை நோக்கி நகர்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளதாகச் சொல்லப்படும் செய்தி, ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜேசன் சஞ்சய், திவ்யா சாஷா என இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருந்த இந்த ஜோடிக்கு இடையில் என்ன நடந்தது? என்ற கேள்வி இப்போது சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது.
”சங்கீதா என்னை ஆழமாகப் புரிந்துகொண்டவர்; தோல்வி நேரங்களில் எனக்குத் தோள் கொடுத்தவர்” எனப் பலமுறை விஜய் தனது மனைவியைப் புகழ்ந்து பேசியுள்ளார். இவர்களது காதல் திருமணத்திற்கு விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரே பச்சைக்கொடி காட்டியது ஒரு அழகான வரலாறு. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இதற்கிடையில், சென்னையில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு நடிகை திரிஷாவுடன் விஜய் ஜோடியாகச் சென்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன. இதுவே பிரிவினைக்குக் காரணமா அல்லது அரசியல் மாற்றங்களா என ரசிகர்கள் மத்தியில் விவாதங்கள் அனல் பறக்கின்றன.
