பொதுவாக உணவகங்களில் ‘செட் பூரி’ அல்லது ‘செட் தோசை’ என்ற பெயரில் இரண்டு அல்லது மூன்று எண்ணிக்கையில் மட்டுமே உணவுகளை வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். தனிப்பட்ட முறையில் ஒன்று கேட்டால், “செட்டாகத்தான் வரும்” என்று ஹோட்டல் ஊழியர்கள் பிடிவாதம் பிடிப்பது பல வாடிக்கையாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இது தொடர்பாக உணவகம் ஒன்றில் நபர் ஒருவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சில ஓட்டல்ல இப்படித்தான் பண்ணுவாங்க.செட் பூரின்னா இரண்டு இல்ல மூணு வைப்பாங்க.இன்னொரு பூரி கேட்டா செட்டாதான் வரும்பாங்க. பூரி சொல்லுச்சா செட்டாதான் வருவேன்னு.. pic.twitter.com/FAM190smCt
— உளவாளி (@withkaran) March 5, 2026
அவர் ஒரு தோசை கேட்டதற்கு, ஹோட்டல் தரப்பில் வலுக்கட்டாயமாக இரண்டு தோசைகளை வழங்கியதே இந்தச் சண்டைக்குக் காரணமாகியுள்ளது. “நாங்கள் எதைக் கேட்கிறோமோ அதைத்தான் நீங்கள் கொடுக்க வேண்டும், அதைவிட அதிகமாகக் கொடுக்கக் கூடாது” என்று அந்த நபர் ஆக்ரோஷமாகப் பேசுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த பல நெட்டிசன்கள், “சாப்பாட்டு விஷயத்தில் ஹோட்டல்கள் செய்யும் இந்தச் ‘செட்’ அரசியல் மாற வேண்டும்” எனத் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
