வெளிநாடுகளில் குற்றவாளிகளைப் பிடிக்கவும், சாலையில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கட்டுப்படுத்தவும் காவல்துறையினர் “டயர் கிராப்புலர்” (Tyre Grappler) என்னும் சாதனத்தைப் பயன்படுத்துகின்றனர். இது ஒரு சிறப்பு கருவியாகும், இதைப் பயன்படுத்தி வேகமாகச் செல்லும் காரின் டயரைப் பின்னால் துரத்தும் காவல் வாகனம் பூட்டிவிடும். இதனால், அந்த கார் வேகமாகச் செல்ல முடியாமல் நிற்க வேண்டிய நிலை ஏற்படும்.

சமீபத்தில், இந்த டயர் கிராப்புலர் சாதனத்தைப் பயன்படுத்தி காவல்துறையினர் ஒரு காரைப் பிடிக்க முயற்சிக்கும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்தக் காணொளியில், சாலையில் வித்தை காட்டிய குற்றவாளியின் காரைப் பிடிக்க காவல்துறையினர் டயர் கிராப்புலரைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், அந்த கார் இந்தப் பிடியிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Wealth (@wealth)

இருப்பினும், கார் வேகமாகச் செல்ல முயலும்போது, அதன் பின்புற டயர்கள் இரண்டும் தனியாகப் பிரிந்து வந்துவிடுகின்றன, இதனால் கார் நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்தக் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டயர் கிராப்புலரின் செயல்பாடு மற்றும் அதன் திறனை இந்தக் காணொளி தெளிவாகக் காட்டுகிறது.