அதிமுக மற்றும் அமமுக இடையே இணைப்பு பேச்சுவார்த்தைகள் தற்போது மிக தீவிரமடைந்து உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ள எஸ்.பி.வேலுமணி தலைமையிலான முக்கிய நிர்வாகிகள் குழு, அமமுக பொதுச்செயலாளர் TTV தினகரனை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த சந்திப்பின் போது, அதிமுகவில் மீண்டும் இணை பொதுச்செயலாளர் பதவியை ஏற்றுக்கொண்டு கட்சியையும் தொண்டர்களையும் வழிநடத்த வருமாறு அவருக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளனர்.

​இருப்பினும், இந்த அழைப்பைத் தொடர்ந்து TTV தினகரன் ஒரு முக்கியமான நிபந்தனையை முன்வைத்துள்ளதாகத் தெரிகிறது. வெறுமனே பெயரளவிலான ஒரு பதவியை மட்டும் வைத்துக்கொண்டு தம்மால் செயல்பட முடியாது என்றும், கட்சியின் முக்கிய முடிவுகள் மற்றும் கொள்கை சார்ந்த விவகாரங்களில் முடிவெடுக்கும் பூரண அதிகாரம் தனக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கட் அண்ட் ரைட்டாக டிமாண்ட் வைத்துள்ளார்.

​வேலுமணி & கோ கொடுத்துள்ள இந்த சர்ப்ரைஸ் ஆஃபர் மற்றும் அதற்கு TTV தினகரன் விதித்துள்ள கெத்தான கண்டிஷன் ஆகியவை அதிமுக தலைமைக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் அதிகாரத்தைக் குறைக்கவும், அமமுகவை மீண்டும் தாய் கட்சியுடன் இணைக்கவும் நடக்கும் இந்த ரகசியப் பேச்சுவார்த்தைகள், தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.