சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் புனேவில் உள்ள திலக் சாலையில் திடீரென ஒரு இளைஞரைச் சந்தித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது காரில் சென்றுகொண்டிருந்த சச்சின், இருசக்கர வாகனத்தில் சென்ற அந்த இளைஞரை அழைத்து அவருடன் உரையாடினார். அப்போது சச்சின் அந்த இளைஞரிடம் மிகுந்த அக்கறையுடன், “உன்னுடைய ஹெல்மெட் எங்கே?” என்று மராத்தியில் கேட்டார்.
மேலும் கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் சச்சினின் இந்தச் செயல் அங்கிருந்தவர்களையும், இணையவாசிகளையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்தச் சந்திப்பின் போது சச்சின் டெண்டுல்கர் அந்த இளைஞருக்கு ஆட்டோகிராப் வழங்கியதுடன், இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
View this post on Instagram
“>
இதனால் ஒரு மாபெரும் கிரிக்கெட் ஜாம்பவான் சாலையில் சாதாரணமாக நின்று ஒரு சாமானிய இளைஞனிடம் நலம் விசாரித்து பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. “சாலைப் பாதுகாப்பு மிக முக்கியம்” என்ற செய்தியை சச்சின் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ள இந்த வீடியோ, தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
