இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, தனது அதிரடி ஆட்டத்தால் மட்டுமல்லாமல் தனது கனிவான குணத்தாலும் ரசிகர்களின் மனதை வென்று வருகிறார். சமீபத்தில் ஒரு நிகழ்வின் போது, ரோஹித்தை கண்ட ஒரு பெண் ரசிகை மிகுந்த உற்சாகத்துடன் அவரிடம் ஓடி வந்து செல்ஃபி எடுக்க முயன்றார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் அந்தப் பெண்ணின் செல்போன் திடீரென சுவிட்ச் ஆஃப் ஆனது.
இதனால் அந்த ரசிகை மிகுந்த ஏமாற்றமும் பதற்றமும் அடைந்தார். இருப்பினும், அந்த இடத்திலிருந்து நகர்ந்து செல்லாமல் ரோஹித் காட்டிய பொறுமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அந்தப் பெண் தனது போனை மீண்டும் இயக்க முயற்சிக்கும் வரை ரோஹித் சர்மா அங்கேயே காத்திருந்து அவருக்கு ஆறுதல் அளித்தார்.
“Ro, tell us if you ever had any awkward fan interaction?” 🫣😅 pic.twitter.com/RHI9UdPiLF
— Mumbai Indians (@mipaltan) May 9, 2026
“>
ஓரு உலகத்தரம் வாய்ந்த வீரராக இருந்தபோதிலும், தனது ரசிகையின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர் காட்டிய இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “ஹிட்மேன்” என்று அழைக்கப்படும் ரோஹித், மைதானத்தில் பந்துகளை சிதறடிப்பது போல, நிஜ வாழ்க்கையில் தனது அன்பால் ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்துள்ளார் என்று நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.
