சமூக ஊடகங்களில் அதிர்ச்சியும் கோபத்தையும் ஏற்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வேகமாக பரவி வருகிறது. வீடியோவில், இரு இளைஞர்கள் பைக்கில் சென்றபோது, பின் அமர்ந்திருந்தவர் சிமென்ட் மூட்டையை திறந்து சாலையில் எறிந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.
இதனால் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் மீது சிமென்ட் பறந்ததோடு, அவர்கள் விபத்துக்குள்ளாகியிருக்க வாய்ப்பும் உள்ளது. ஆனால், இவர்கள் எந்த வருத்தமும் இல்லாமல் தங்கள் செயலை வெற்றியாக கொண்டாடுவதும் காணப்படுகிறது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் X-தளத்தில் @NazneenAkhtar23 என்ற கணக்கில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. “வேகமாக செல்லும் பைக்கில் சிமென்ட் சாக்கு திறக்கப்பட்டது. சாலையில் மக்களின் உயிரோடு விளையாடப்படுவதைக் கற்பனை செய்யுங்கள்… இது நமது சுதந்திர இந்தியா!” என்ற வாசகத்துடன் பகிரப்பட்ட இந்த வீடியோவுக்கு தற்போது 3.41 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகள் கிடைத்துள்ளன.
तेज चलती बाइक पर खोला सीमेंट की बोरी,
सोचिए सड़क पर लोगों की जान से खिलवाड़ किया जा रहा है।
ये है हमारा स्वतंत्र भारत देश, जहां हर चीज की आजादी है,, pic.twitter.com/siURyMpEe0
— Adv.Nazneen Akhtar (@NazneenAkhtar23) August 25, 2025
“>
பயனர்கள் இந்த வீடியோவைக் கண்டவுடன் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். “ரீல்ஸ் மற்றும் போலியான புகழுக்காக இளம் தலைமுறை தவறான பாதையில் செல்கின்றது” என ஒருவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்னொருவர், “இவர்களை கண்டுபிடித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இது வெறும் காமெடியல்ல, மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் செயல்!” என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பரவி, சமூக ஒழுங்கு மற்றும் பொறுப்புணர்வு குறித்து பெரிய விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
