கரூர் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 41 அப்பாவி பொதுமக்களின் குடும்பங்கள் இன்னும் துயரத்தில் இருந்து மீளாத நிலையில், அந்த நிகழ்ச்சியால் அப்பகுதியில் வியாபாரம் செய்து வந்த சிறு வணிகர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கூட்டம் நடைபெற்ற இடத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தப்பிக்க முடியாமல் கூரை, சுவர், கடை ஷட்டர்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன. உயிர் தப்பிக்க பலர் கடைகளின் கூரைகள் மீது ஏறிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதன் விளைவாக அப்பகுதி கடைகளின் மேற்பாகங்கள், சாளரங்கள் என அனைத்தும் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
“நஷ்ட ஈடு கேட்டால் யாரும் பதில் சொல்லாம போறாங்க ” வேலுசாமிபுரம் வியாபாரிகள் வேதனை! 😡🤦🏻 pic.twitter.com/8DN1arjrME
— Gypsy 🎭 (@Gypsy_1809) October 10, 2025
“>
அப்பகுதி மக்கள் கூறுகையில், “சேதமடைந்த பொருட்களை சரி செய்வதற்கே குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் வரை செலவாகும். தற்போது வியாபாரம் முழுவதுமாக நின்றுவிட்டது; கடனில் விழுந்துள்ளோம். கூட்டம் நடத்தியது தமிழக வெற்றிக்கழகத்தினர் என்பதால், விஜய் அவர்களும் கட்சி நிர்வாகிகளும் நஷ்டஈடு வழங்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்களும் ஒத்துழைப்பு தெரிவித்துள்ளனர். “கூட்டத்துக்குச் சென்றவர்கள் தான் இதற்குப் பொறுப்பு; சேதம் ஏற்பட்ட கடைகளுக்கு உடனடியாக நஷ்டஈடு வழங்குங்கள்” என பலரும் கருத்து பதிவு செய்து வருகின்றனர்.
