ஈரோடு அதிமுக வேட்பாளர் அசோக்குமார் ரூ. 648 கோடி சொத்து வைத்துள்ளார். ஆனால், அவருக்கும், அவரின் மனைவிக்கும் சொந்தமாக ஒரு கார், இருசக்கர வாகனம் கூட இல்லை. அசோக்குமாரின் அசையும் சொத்துகள் பெரும்பாலானவை வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில் வைப்பீட்டு தொகையாகவே உள்ளன. அசோக்குமார் மற்றும் அவரது மனைவியிடம் தலா 10 கிலோ தங்கம் (மொத்தம் 20 கிலோ) இருக்கிறது.

அசோக்குமாரின் பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் மொத்தம் ₹648 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார். அசோக்குமார் பெயரில் ₹526 கோடிக்கு அசையும் சொத்து, ₹57 கோடிக்கு அசையா சொத்து மற்றும் மனைவி கருணாம்பிகா பெயரில் ₹47 கோடிக்கு அசையும் சொத்து, ₹22 கோடிக்கு அசையா சொத்தும் உள்ளன. இவர் பாஜக MLA சரஸ்வதி மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.